Sex torture; transgender siege the State Transport Minister office

Sex torture; transgender siege the State Transport Minister office
Sex torture; transgender siege the State Transport Minister office
கரூரில் பாதுகாப்பு அளிக்க கோரியும், தங்களை செக்ஸ் டார்ச்சரில் ஈடுபட வைக்கும் மற்ற திருநங்கைகளிடம் இருந்து எங்களை காப்பாற்ற வேண்டி தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிட்ட திருநங்கைகளால் பெரும் பரபரப்பு
கரூர் மாவடியான் கோயில் தெருவில் வசிக்கும், திருநங்கைகளான அழகி, துர்காதேவி, நந்தினி, ஆனந்தி, ஸ்ரீ ஆகிய ஐந்து திருநங்கைகளை, மற்ற திருநங்கைகள் கொடுமைப்படுத்துவதாகவும், செக்ஸ் டார்ச்சர் செய்து விபாச்சாரம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கோரி பல்வேறு முறைகேடு செயல்களில் மணவாசியை சேர்ந்த திருநங்கைகள் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக கரூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் எந்த வித பயனுமில்லாத நிலையில், கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இது குறித்து மேலும், மேலும் காவல்துறையிடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் கரூர் திருவள்ளுவர் மைதானத்தின் அருகே உள்ள கரூர் சட்டமன்ற அலுவலகமும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது தங்களை செக்ஸ் டார்ச்சரில் ஈடுபடக்கோரியும், பல தீய செயல்களில் ஈடுபடகோரி டார்ச்சர் செய்வதாகவும் புகார் தெரிவித்தனர். அப்படி செய்யாத பட்சத்தில் கை, கால்களில் சூடுவைத்ததாகவும், அவர்களை விட்டு வெளியேறியதால் அந்த திருநங்கைகள் ஆட்களை வைத்து கொலை செய்வதாகவும் மிரட்டல் விடுவதாக கூறி அமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தமிழக முதல்வர் மூன்றாம் பாலினமாக எங்களை அறிவித்ததோடு, எங்கள் இனத்திற்கு எஸ்.ஐ வேலைகள் உள்ளிட்ட வேலைகளை செய்து பல நல்ல சமுதாய மாற்றங்களை ஏற்படுத்தியவர் என்றும், அவரது அமைச்சர் எங்கள் பிரச்சினையை தீர்க்க வேண்டுமென்று குறையாக எடுத்து கூறினர். சுமார் 1 மணி நேரமாக நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டதையடுத்து வந்த கரூர் நகர காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அந்த திருநங்கைகள் கலைந்து சென்றனர்.
பேட்டி : துர்கா தேவி – திருநங்கை – கரூர்
This Video Covered From Karur District Reporter (Tamil Nadu) From South Indian Crime Point Weekly. For More Details Pl Visit : or or
source: https://blogtruyenhinhfpt.com/
More: https://blogtruyenhinhfpt.com/global/
Hi
Please help MLA and police